பிரிட்டனில் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகள் நெரிசலானதாகவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குறைந்த விசாலமுள்ள வீடுகளில் வசிப்பதாலும் பெரும்பாலான மக்கள் புதிதாக வீடுகள் வாங்குவதை விடுத்து தங்களுக்குள்ளான இடத்திலேயே அதிக நெரிசல் இல்லாமல் வாழ்ந்துகொள்ளப் பழகி வருகிறார்கள். இதுபோன்ற போக்கு தோன்றினாலும் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்திக்கொள்ள முயல்கிறார்கள். வீடுகளைத் தங்களது மனைக்குள்ளேயே தளங்களை அதிகரித்துக்கொள்வோரும் வாங்கும் செலவைச் சுருக்கித் தளங்களைக் குறைவாகக் கட்டிக்கொள்வோரும் உண்டு. இருக்கக்கூடிய மனையில் காலியாக உள்ள பகுதியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல வழிகள் உள்ளன. ஆனால், அவரவர் நிதி கையிறுப்பு, எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைப் பொருத்தே விரிவாகக்கமும் சாத்தியப்படும். கூடுதலாகப் படுக்கை அறைகள், சமையலறைகள், சாப்பாட்டு அறைகள், படிப்பு அறைகள் கட்டுவது, வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டுக்குள்ளேயே காலி இடத்தில் தொழிற்கூட அறைகள் கட்டுதல், விளையாட்டுக்கென தனி இடங்கள் அமைத்தல் என பல பயன்பாடுகளுக்காக வீட்டை விரிவாக்கம் செய்ய வழி இருக்கிறது. ஆனால், விரிவாக்கத்திற்கு எவ்வளவு செலவாகும், நகரிய அனுமதி கிடைக்குமா என்பது போன்ற விஷயங்களால் முன்கூட்டியே சிறிது கவனம் செலுத்துவது அவசியம். எனவே, இந்த விஷயங்களில் மூக்கை நுழைத்துவிட்டால் பல்வேறு குழப்பங்கள் வந்துதான் தீரும். அவற்றை முறியடித்துப் புதிய திட்டத்தை எப்போது, எப்படி தொடங்குவது என நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டியிருக்கும். இப்படி பல சிரமங்களைச் சந்திக்கவிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அவரவர் மனைகளில் எவ்விதம் விரிவாக்கம் செய்யலாம் என ஆலோசனைகூற பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஸ்டீபன் சுமித். இதற்காக இவர் தொடங்கியுள்ள நிறுவனத்தின் பெயர் "பெட்டர் நெஸ்ட்" சிறந்த கட்டட கட்டுமான வல்லுநர்களைக்கூட இவர் அடையாளம் காட்டுவார். இதற்கு எல்லாவற்றிற்கும் சேர்த்து இவர் வாங்கும் கட்டணம் 495 பவுண்ட் மட்டுமே. ஆனால், சொத்து விவரம் முழுமையாகவும், பிளான் வாங்குவது உட்பட பல விஷயங்களைப் பற்றி இவர் துல்லியமாக ஓர் அறிக்கையே கொடுத்துவிடுவார்.
பிரிட்டனில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தற்போது நடைமுறையில் உள்ள நகர மேம்பாட்டுச் சட்டப்படி எளிதாக விரிவாக்க அனுமதி பெறக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால், இந்த விஷயம் பலருக்குத் தெரியவில்லை என்கிறார் ஸ்மித். ஒரு தகுதி பெற்ற கட்டுமானக் கலை வல்லுநரான இவர், வீடு விரிவாக்கத்தை மிகச் சுலபமான முறையிலும் அதிக நீளமான விண்ணப்பங்களை எளிதாகப் பூர்த்தி செய்து அனுமதி பெறவும் வழிவகைகளை நகரியத் திட்டமிடல் துறையினர் வீட்டு உரிமையாளர்களுக்குச் சாதாரணமாக சொல்லுவதில்லை. இந்த வகையில் இவர் பல்வேறு வெறுப்பேற்றும் அனுபவங்களைப் பொறுமையாகச் சந்தித்துள்ளார். இந்தப் பட்டறிவு மூலம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை எவரால் சொல்ல முடிகிறது.
இப்படி பல்வேறு வழிமுறைகளை அரசு அதிகாரிகள் வீட்டு உரிமையாளர்களுக்குச் சொல்லித்தர மனமில்லாமல் இருப்பதையும் இவர் நன்கு உணர்ந்து அதற்கேற்றபடி செயல்படுகிறார். வீட்டு உரிமையாளர்கள் இது விஷயத்தில் எல்லாம் பெற உரிமை உள்ளது. ஆனால், அதிகார 'நந்திகள்' விடுவதில்லையே என்கிறார் அவர். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் 95 சதவீதத்தினர் அதிகாரிகளின் விசாரணையை மேஜையிலேயே முடித்துக்கொள்ளும் வகையில் போதிய விவரங்களுடன் இருக்கின்றனர். வீட்டுக்குச் சென்று நேரடி அளவீடுகள் செய்யப் பெரும்பாலும் தேவையிராது. அந்த அளவுக்கு அனைத்து விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் அவர்.
வீட்டு உரிமையாளர்கள் சுமார் 600 பேரிடம் னீஷீஸ்மீனீமீ.நீஷீனீ என்ற டாட்கொம் நிறுவனம் ஒரு சர்வே எடுத்தது. பெரிய வீடுகளாக சொகுசுப் பங்களாக்களாக உள்ள வீட்டு உரிமையாளர்கள்தான் இவ்விதம் விரிவாக்கம் செய்ய அதிகம் முயற்சிக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இருக்கும் இடத்தில் வாழ்வதற்கு இடவசதி போதவில்லை என்பதால்தான் பலரும் விரிவாக்கம் செய்ய விரும்புகின்றனர் என்கிறார் இந்த டாட்கொம்மின் உரிமையாளர். தற்போது வீட்டு விற்பனைச் சந்தையில் வீடு விற்பனை முன்பைவிட இப்போது குறைந்துவிட்டது என்ற போதிலும் இட வசதி போதவில்லை என்பவர்கள் வேறு காரணங்களுக்காகவும் வீடுகளை விற்க விரும்புபவர்களும் இருக்கிறார்கள். கெரி_ ஆன்ஜிவால்டர்ஸ் தம்பதி மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டனில் 3 குழந்தைகளுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை விற்க முன்வந்துள்ளார். 3 படுக்கை அறை வசதி கொண்டது இவர்களது வீடு. இவர்களது வீட்டை விரிவாக்கம் செய்திட வாய்ப்பு உள்ளது. என்ன மராமத்துச்செலவு சற்று அதிகம் ஆகும் அவ்வளவுதான். ஆனால், அவர்கள் அந்த வீடே வேண்டாம் என விற்றுவிட்டுப் புதிதாக அருகில் இருந்த 3 படுக்கை அறை கொண்ட பழைய வீடு ஒன்றை வாங்கிக்கொண்டார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் புதிதாக வாங்கும் வீட்டை எளிதாக விரிவாக்கம் செய்துகொள்ள இடவசதி உண்டு என்பதுதான். இது பற்றி ஆன்ஜி கூறுகையில், தனது மகன் டாம் இப்போதுதான் செகன்டரி கல்வி பயிலத் தொடங்கியுள்ளான். எனவே, இந்தப் பகுதியைவிட்டு வேறு பகுதிக்குச் செல்ல விரும்பவில்லை. இதே விலைக்கு இதைவிட அதிக அறைகள் கொண்ட வீடுகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், அவற்றில் விரிவாக்கத்திற்கு வழியில்லை என்பதால் ஒதுங்கிவிட்டேன். இந்த வீடு சற்று பழையது என்றாலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது எனக் கருதியே இதை வாங்கினேன். கெரியை கூட்டிச் சென்றிருந்தால் அவருக்கு இந்த வீடு பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். எனவே, தானே தனியாகச் சென்று பார்த்து விலைபேசி முடித்ததாக அவர் கூறினார்.
இந்த வீட்டைப் பார்த்ததுமே அதை எப்படி மாற்றியமைக்கலாம் என வடிவமைக்க (லே அவுட் டிசைனிங்) முடிந்தது. முற்றத்தையும், புழக்கடையையும் எளிதாக நீட்டி விடலாம் எனத் தெரிந்தது. கொல்லைப்புறத்திற்குச் செல்ல சைடில் தனியாக வழிவைத்து விட முடியும் எனப் புரிந்தது. எனவே, நமது கூடுதல் இடவசதி தேவைக்கு இது பொருத்தமாக இருக்கும். இடித்துக்கட்டுவதும் சுலபமாக இருக்கும் எனத் தெரிந்ததால் மனைவி சொன்னதைக் கேட்டு இதை வாங்க முடிவு செய்ததாக கெரி கூறினார்.
இந்த வீட்டை வாங்க இந்த ஜோடி பணம் சேர்க்க 3 ஆண்டுகள் ஆகின. விரிவாக்கப் பிளான் எளிதாக ஏற்கத்தக்கதாக உள்ளூராட்சி சபை அனுமதி கிடைத்துவிட்டது. மிக சிக்கனமாகச் செலவு செய்து 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டை 5 படுக்கை அறைகள் கொண்ட வீடாக மாற்றிவிட்டனர். இப்போது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி அறை கிடைத்துவிட்டது.
முன்பு காம்பவுண்ட் சுவர் இருந்த அளவுக்கு இப்போது அறைகளை நீட்டித்துள்ளதால் புழக்கத்திற்கு அறை பெரிதாக இருக்கிறது. இரண்டு மாடிக் கட்டடத்தின் எல்லாப் பகுதிகளிலும் நீட்டித்துக் கட்டியதால் தினசரிப் புழக்கத்திற்குப் போதிய இடவசதி கிடைத்துள்ளது. கட்டட விரிவாக்கத்திற்கு இவர்கள் தேர்ந்தெடுத்த நிறுவனமும் இவர்களிடம் மனங்கோணாமல் நடந்துகொண்டது. இவர்கள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள்ளேயே கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பொது குடிநீர்க் குழாய் இணைப்பும், பாதாளசாக்கடை இணைப்பும் இப்போது கிடைத்துவிட்டது. 1,50000 பவுண்ட் செலவில் 6 மாதத்தில் கட்டட வேலைகள் முடிந்துவிட்டன. இப்போது ஆளுக்கு ஓர் அறை கிடைத்துவிட்டது. கூடுதலாக 2 படுக்கை அறைகள் கட்டியுள்ளோம். இதனால், புதிய வீட்டின் மதிப்பு 3.85 லட்சம் பவுண்ட்டுக்குக் கூடியுள்ளது என்றார் கெரி.
கார் நிற்குமிடத்தை அகலமான அறையாக மாற்றிவிட்டோம். வீட்டு முன்புறம் இருந்த முற்றத்தை அழகான அறையாக மாற்றிப் புழக்கத்திற்கு வைத்துக்கொண்டோம். முன்பு சாப்பாட்டு அறையாகவும் சமையல் அறையாகவும் தனித்தனியாக இருந்த அறைகளை இப்போது ஒன்றாக இணைத்துவிட்டோம். இதனால், அந்த அறை மூலம் விசாலமான சமையலறை சாப்பாட்டு அறை அமர்ந்து பேசும் அறை என ஒன்றில் மூன்று பயன்பாடு சாத்தியப்பட்டுள்ளது. மேலும் அந்த அறையிலிருந்து பின்புறம் உள்ள வீட்டுத்தோட்டத்திற்குச் செல்ல ஒரு கதவும் வைத்துவிட்டோம். எனவே, தோட்டத்திற்கு வீட்டை முன்வாசல் வழியாகச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கண்ணாடி பதித்த கதவுகளும் அமைத்துள்ளோம். பின்வாசல் வழியாக அதிக வெளிச்சம் கிடைக்கிறது என்றார் கெரி.
'னீஷீஸ்மீ ஷீக்ஷீ வீனீஜீக்ஷீஷீஸ்மீ' என்ற சஞ்சிகையின் ஆசிரியர் கரோன் பிரான்சன் கூறுகையில், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை இடித்து விசாலமாகக் கட்டிக்கொள்வதையே விரும்புகிறார்கள். இடவசதி குறைவாக இருக்கிறது என்று கருதி வீட்டை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கிச் செல்ல விரும்புவதில்லை என்கிறார். இதுபோன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதன் காரணமாகவே அவர்களுக்கு வீட்டை இடித்துக்கட்டுவது தொடர்பாக பல அரிய ஆலோசனைகளைத் தெரிவிப்பதற்காக இந்தக் கட்டுமானச்செய்தி மடலைத் தொடங்கினோம்.
பெரும்பாலான மக்கள் ஒரு பகுதியை விட்டு வேறு பகுதிக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளத் தயங்குகிறார்கள். அந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப்போவதும், பாடசாலை வசதிகளும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.
இப்படி பெரும்பாலானவர்கள் சொந்த வீட்டையே இடித்துக் கட்டிக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதால்தான் கட்டிய வீடுகள் இப்போது அதிக விற்பனைக்கு வருவதில்லை என்கிறார் பிரான்சன். இதற்கு அத்தாட்சியாக ஏராளமான கடிதங்கள் அவரது மெயில் பாக்ஸுக்கு வந்துள்ளன. இப்படி இடித்துக்கட்டுவதில் வல்லவர்களான கட்டுமான வல்லுநர்களுக்கு மௌசு அதிகரித்துள்ளது.
முதல்முறையாக வீடு வாங்குபவர்கள், பலதரப்பட்ட வீடு விற்பனையாளர்கள் இவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். நிரந்தரமாக தாங்கள் குடியிருக்கவிருக்கும் வீட்டை அழகாக மாற்றி அமைக்கக் கூடிய கட்டுமான வல்லுநர்கள் பற்றி பலரும் பல தடவை விசாரித்த வண்ணம் உள்ளனர். ஷ்ஷ்ஷ். னீஷீஸ்மீ ஷீக்ஷீ வீனீஜீக்ஷீஷீஸ்மீ.நீஷீ.ளீ என்ற வெப்சைட்டில் வீட்டை இடித்துக்கட்டி அழகுபடுத்துவது பற்றிய எண்ணற்ற ஆலோசனைக் குறிப்புகள் குவிந்து கிடக்கின்றன.
இப்படி வீட்டை மாற்றியமைக்க விரும்புவர்கள் முதலில் இதற்கென நிபுணர்களைக்கொண்டு நடாத்தப்படும் சிறப்புக் கண்காட்சிகளுக்குச் சென்று பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது என்கிறார் பிரான்சன்.
நீங்கள் எவ்வளவு காலம் அந்த வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொண்டு செலவு செய்யத் தொடங்குங்கள். சொத்து கைவிட்டுப் போகும்போது கணிசமான தொகை கிடைக்குமா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் லண்டன் ஸியர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோ எக்லஸ்.
வீட்டை விரிவாக்கம் செய்வதால் அதன் சொத்து மதிப்புக் கூடுமா என்பதைக் கவனத்தில் கொண்டு புது முயற்சியில் இறங்குங்கள். இப்போது சதுர அடிக்கு 300 பவுண்ட் செலவழித்துக் கட்டுகிறீர்கள் என்றால் அதன் மதிப்புப் பிற்காலத்தில் நீங்கள் வீட்டை விற்கும்போது சதுர அடிக்கு 500 டொலர் கிடைக்குமாறு பார்த்துக் கட்ட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறுகிறார் அவர்.
சில நேரம் அளவுக்கு அதிகமாக விரிவாக்கம் செய்துவிடுவது பற்றி நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர். இப்படிச் செய்வதால் சில நேரம் வீட்டின் உயரமான பகுதி அளவுக்கு அதிகமான உயரத்துடனும், வீட்டுத்தோட்டம் போடுவதற்காகப் போதிய இடம் ஒதுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்திவிடும். இது கட்டடத்தின் அழகையும் விலை மதிப்பையும் குறைத்துவிடக்கூடும் என்பதே இந்த நிபுணர்கள் கவலைக்குக் காரணம்.
ஸியர்ச் நிறுவன ஏஜன்டான ரொபர்ட் பெய்லி கூறும் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. நீங்கள் வீட்டை இடித்துக் கட்டினால் அதன் மதிப்புக் கூடத்தான் செய்யும் ஆனால், பொருத்தமான வகையிலேயே மாற்றங்கள் செய்ய வேண்டும். பொருத்தமற்ற மாற்றங்கள் செலவு வைப்பதுடன் சரி அதனால் சொத்து மதிப்புக் கூடாது என்கிறார் அவர்.
சமையலறையும், அமர்ந்து பேசக்கூடிய அறையும் மிகச் சிறியதாக இருக்கும்போது அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் கூடுதலாக 5 படுக்கை அறைகளைக் கட்டுவது பொருத்தமாக இருக்காதே. அதுபோல, ஒரு குடும்பத்திற்குப் போதுமான அளவு வீடு கட்டும்போது வீட்டுத் தோட்டத்தை குழந்தைகள் விளையாடத் தேவையான அளவுக்கு மட்டும் அமைத்துக்கொள்வது போதுமானதாக இருக்கும். அதைவிடுத்து மிகவும் நீளமான வீட்டுத்தோட்டம் அமைத்தால் வீண் செலவுக்குத்தானே வழிவகுக்கும் என்கிறார் அவர். எனவே, பொருத்தமான மாற்றங்களே நன்மை பயக்கம்!
Tuesday, October 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment